மேம்பால தடுப்பில் அரசு பஸ் மோதி விபத்து: 3 பேர் காயம்!

4724பார்த்தது
மேம்பால தடுப்பில் அரசு பஸ் மோதி விபத்து: 3 பேர் காயம்!
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பெங்களூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வளையாம்பட்டு அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. மேலும் மேம்பால தடுப்பு சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் மற்றும் சென்னையை சேர்ந்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய பஸ்ஸை அப்புறப்படுத்தினர். மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி