முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை மற்றும் மருத்துவ அணி சார்பில் அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை சரவணா திருமண மண்டபத்தில் நாளை (பிப்.21) காலை 8 மணிக்கு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.