ஆம்பூர் பஜாரில் நள்ளிரவில் தீடீரென தீப்பற்றிய பூக்கடை

4038பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூக்கடை பஜார் பகுதியில் சந்தபேட்டை மஜீத் பகுதியை சேர்ந்த பாஷா ஷைப் என்பவர் 20 ஆண்டுகளாக பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு கடை மூடிவிட்டு சென்ற நிலையில் நள்ளிரவில் திடீரென கடை தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் பாஷா ஷைப் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பூக்கள் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து கருகி நாசமானது.

இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் மின் கசிவு ஏதேனும் ஏற்பட்டதா? அல்லது புத்தாண்டு தினத்தில் சமூக விரோதிகள் யாரேனும் கொளுத்தி விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி