காய்கறி விலை கிடுகிடு உயர்வு

82பார்த்தது
காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் காய்கறி விளைச்சல் குறைந்து வருவதால் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகளில் காய்கறி வரத்து வெகுவாக குறைந்ததுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ ரூ.20ஆக இருந்தது, தற்போது ரூ.40ஆக உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் ரூ.28ல் இருந்து ரூ.30 ஆகவும், பீன்ஸ் ரூ.100ல் இருந்து ரூ.140 ஆகவும், இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர். அதே போல், கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெங்காயம், பாகற்காய், புடலங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லி உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி