வைகாசி விசாகத் திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

77பார்த்தது
வைகாசி விசாகத் திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை முன்னிட்டு வருகிற வைகாசி 9ஆம் தேதி புதன்கிழமை 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.06.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி