ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து, ரூ.43 லட்சம் வரை வசூல் செய்து கந்துவட்டி கொடுமை செய்ததாக அஞ்சலையின் மருமகன் டாட்டூ மணி புகார் அளித்தார். அதன் பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அஞ்சலைக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.