வீட்டின் மொட்டை மாடியில் மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றவும். இது உங்கள் சூடான மேற்கூரையை குளிர்விக்கும். மின்விசிறி இயங்கும் போது, சூடான காற்றுக்கு பதிலாக குளிர் காற்று வரும். இது இரவில் நிம்மதியாக தூங்க உதவும். மேலும், ஒரு விரிந்த பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள் மற்றும் தண்ணீரை நிரப்பி, மின்விசிறியின் முன்புறம் வைக்கவும். இது குளிர்ந்த காற்றை தரும். வீட்டுக்குள் ஈரத் துணிகளை காயப் போடலாம். இந்த ஈரமான துணிகள் ஆவியாதல் மூலம் குளிரூட்டும் விளைவை உருவாக்கலாம்.