மக்களவையில் இன்று (ஜூலை 29) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது. "பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் தான் இருக்கின்றனர்" என்றார். தொடர்ந்து, பட்ஜெட்-2024 மீதான விமர்சனத்தையும் முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.