ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டிடத்தில் உக்ரைனின் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது. ஆளுநர் ரோமன் புசார்சின் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் தாக்குதலுக்கு விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 20 ஆளில்லா விமானங்கள் விரட்டப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.