பொறுப்பு முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

82865பார்த்தது
பொறுப்பு முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?
முதல்வர் ஸ்டாலின் இந்த மாத இறுதியில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் தமிழ்நாட்டில் பணிகளை ஒருவர் கவனிக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இருக்கமாட்டார் என்பதால் சட்டம் ஒழுங்கு மற்றும் இதர பிரச்சனைகளை கவனிக்க நம்பிக்கையான ஒருவர் வேண்டும் என்பதால் உதயநிதி ஸ்டாலினை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி