ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

85013பார்த்தது
ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் ஐ.எல்.76 விமானம் விபத்துக்குள்ளானது. கைதிகள் பரிமாற்றத்துக்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்க்கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி