கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி இருவர் காயம்

67பார்த்தது
குஜராத்தின் இடார் பகுதியில் உள்ள ஜாதர் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 10ஆம் தேதி எரிபொருள் நிரப்புவதற்காக கார் ஒன்று ​​வந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பெட்ரோல் நிலைய வாடிக்கையாளர்களை நோக்கி சென்றது. அப்போது அங்கிருந்த இருவர் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி