உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷாப்பிங் மாலில் நடந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் இயங்கிவரும் ப்ளூ சஃபைர் என்ற மாலில் இரண்டு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, தடுப்பு கிரில் உடைந்து உயரத்தில் இருந்து இருவரும் விழுந்துள்ளனர். 35 வயதான ஹரேந்திர பாடி மற்றும் ஷகீல் ஆகிய இரு தொழிலாளிகள் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.