பட்ஜெட்டிற்கு முன்பாக நிதியமைச்சர் அல்வா கிண்டிய போட்டோ காண்பித்த பொழுது கேமரா ஆஃப் ஆனதால் சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல்காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் கூட பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் ஒருவரும் இல்லை. நாட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பதற்காக 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர், ஆனாலும் மத்திய அரசின் பட்ஜெட் அல்வா பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.