டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

537பார்த்தது
டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்
ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் டிராவல்ஸ் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐதராபாத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் 30 பேர் இருந்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி