தூத்துக்குடி: மேலநம்பிபுரத்தில் சீதாலட்சுமி, மகள் ராமஜெயந்தி 2ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். முனீஸ்வரன், முகேஷ், வேல்முருகன் ஆகிய மூவரும் வீடு புகுந்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்தனர். அன்றிரவு மூவரும் தாய், மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான முனீஸ்வரன் வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். கொள்ளையடித்த நகையை மீட்கச்சென்ற போது அரிவாளால் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர்.