திண்டுக்கல்: ஊராளிப்பட்டியில் வீற்றிருக்கும் சரபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான் வேண்டுவோர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் இறைவனாக உள்ளார். இந்த ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கும்ப குரு மணி மற்றும் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் வந்தனர். இவர்கள் இந்த ஆலயத்தில் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்பு உலக நன்மை மற்றும் மக்களின் நலன் வேண்டி சிறப்பு யாகத்தில் ஈடுபட்டனர்.