இடஒதுக்கீடு தொடர்பாக வங்கதேசத்தில் நிலவி வரும் கடும் பதற்றத்தை அடுத்து இந்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வங்கதேசத்திற்குச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இதற்கிடையில், பதற்றம் காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்தை மூடுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. அலுவலகம் இம்மாதம் 7ம் தேதி வரை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.