நடிகர் அஜித்குமார் சினிமாவில் இன்று உச்ச நடிகராக திகழ்கிறார். உண்மையில் அஜித்திற்கு நடிப்பை விடவும், வேறு ஒரு துறையில் தான் சூப்பர்ஸ்டாராக வலம்வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால், வாகனங்கள் தொடர்பான ஏதேனும் ஒரு பணியைத் தான் அஜித் செய்திருப்பார். 2004 ஆம் ஆண்டில், British Formula 3 Scholarship Class பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்ததை உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்தது.