நிதி ஒதுக்கீட்டில் இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்தால், திமுக நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும் என இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டை விட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட் தான் நாட்டுக்குத் தேவை என பதிவிட்டுள்ளார்.