பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார்!

26391பார்த்தது
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார்!
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் தயார் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இது ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடம் தற்போது வரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி