டெல்லி தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 03) 32வது சர்வதேச வேளாண் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டை (ICAE) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் பிரதமர் உரையாற்றி வருகிறார். ஐசிஏஇ 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாக நிலையான வேளாண் உணவு முறைகளை நோக்கி நகர்தல் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாயம் மற்றும் உணவு வரலாறு மிகவும் பழமையானவை என கூறியுள்ளார்.