தமிழ்நாட்டின் தலைநகராகவும், தொழில் நகரங்களில் முதன்மையாகவும் விளங்கும் சென்னையின் 385-வது நாளை இன்று (ஆக.22) கொண்டாடுகிறோம். கிழக்கிந்திய கம்பெனியினர் 1639-ம் ஆண்டு சென்னப்ப நாயக்கரிடமிருந்து புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினர். இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 22-ம் தேதி கையெழுத்தானது. இந்த நாளை தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடுகின்றனர். ஜூலை 17, 1996 மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.