சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அதிக அளவில் பாதிப்படையும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு 'ஏர் தன்ஷின்' என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படும்போது சென்சார்கள் மூலமாக விரிவடையும் ராட்சத பலூன், வீட்டை சில அடிகள் நிலத்தில் இருந்து மேலே உயர்த்துமாம். இதன்மூலம் நிலநடுக்க பாதிப்பை குறைத்து வீட்டை பழைய நிலைக்கு மாற்றலாம் என அந்நிறுவனம் கூறுகிறது.