வெறிச்சோடிக் காணப்பட்ட வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்

66பார்த்தது
வெறிச்சோடிக் காணப்பட்ட வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் தொடா் ஊழியா் விரோதப் போக்கை கைவிட்டு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், அரசு திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு அதிக பணி நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதனால் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி