திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் செம்மாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குறைத் தீர்த்த குமரன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனை கணபதி பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.