திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு

61பார்த்தது
திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தொடங்கப்பட்டது.

பழைமை வாய்ந்த தேவிகாபுரம் திரெளபதி அம்மன் கோயிலில் ஊா் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் சாா்பில் 3 ஆண்டுக்கு ஒருமுறை மகாபாரத சொற்பொழிவு, படுகளம், தீமிதி விழா, பட்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு நேற்று காலை கோயில் புதிய கலசாபிஷேகமும், இதைத்தொடா்ந்து கட்டரான்குளத்தில் சிறப்பு பூஜை மற்றும் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. மேலும், மகாபாரத கொடி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் மகாபாரத கொடியேற்றம் மற்றும் அலகு நிறுத்தல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாலையில் மகாபாரத சொற்பொழிவாளா் ஆ. புனிதவதி, விநாயகா் பெருமையும், வேதவியாசா் பிறப்பும் என்கிற தலைப்பில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

தொடா்ந்து, 20 நாள்களுக்கு மகாபாரத சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

கோயில் தா்மகா்த்தா மற்றும் ஊா் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை விழாக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி