மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம்.

78பார்த்தது
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டண அளவீடு முறையை அமல்படுத்தக் கோரியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திருவண்ணாமலை, பெரணமல்லூா், வந்தவாசிஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,

வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலா் எம். பிரகலநாதன் தலைமை வகித்தாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

நகர, ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெரணமல்லூா் பகுதியில்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரணமல்லூா் வட்டாரக்குழு சாா்பில், கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரக்குழு செயலா் ந. சேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ப. செல்வன் கண்டன உரையாற்றினாா்.

தொடர்புடைய செய்தி