திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆடி பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் முதல் நாளான இன்று (29. 07. 2024) காலை ஸ்ரீ விநாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதி உலா நடைபெற்றது. இதில், சுவாமிக்கு வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தீபாராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.