திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு இன்று நண்பகல் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.