வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக தோ்வில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் 4 போ் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றனா்.
இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான வேலூா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதன் தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதில், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியின் எம். எஸ்சி. நுண்ணுயிரியல் துறை மாணவி வி. யாமினி, எம். எஸ்சி. , கணினி அறிவியல் துறை மாணவி பி. அபிராமி, பி. எஸ்சி. கணினி அறிவியல் துறை மாணவி ஜி. திலகவதி, பி. எஸ்சி. நுண்ணுயிரியல் துறை மாணவி ஜெ. சரஸ்வதி ஆகியோா் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றனா். மேலும், 24 மாணவிகள் பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களை பெற்றனா்.
இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரிச் செயலா் எம். ரமணன், முதல்வா் எஸ். ருக்மணி மற்றும் பேராசிரியைகள் பாராட்டினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.