திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பழமை வாய்ந்த முருகர் கோயிலில் இன்று (செப்டம்பர் 13) ஆவணி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.