மணல் கடத்திய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

58பார்த்தது
மணல் கடத்திய மூன்று பேர் மீது வழக்கு பதிவு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம், கல் பூண்டி, எஸ்வி நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள கமண்டல நாக நிதி ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடப்பதாக ஆரணி தாலுகா போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் எஸ்ஐ-க்கள் அருண்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல் சீசமங்கலம், அம்பேத்கர் தெருவில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த மூன்று பேர் போலீசார் கண்டதும் மாட்டு வண்டியை விட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தப்பியோடிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி