நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.,க்களும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக கூறி பாஜக எம்.பி.,க்களும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்., பாஜக எம்.பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாஜக எம்பி., பிரதாப் சாரங்கிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி மற்றொரு எம்.பியை தள்ளிவிட்டதால் அவர் தன் மீது விழுந்ததால் காயமுற்றேன் என பிரதாப் சாரங்கி குற்றசம்சாட்டியுள்ளார்.