
திருவண்ணாமலை: வாட்ஸ்அப் சேனலில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அதிமுக ஐடி விங் சார்பில் வாட்ஸ்அப் சேனலில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பரத் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வாட்ஸ்அப் சேனலில், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.