நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் காங்கேயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் வகுப்பறைக்கு சென்று மாணவ மாணவியர்களோடு கலந்துரையாடி மாணவ மாணவியர்களின் கற்றல் வாசித்தல் திறன்களை ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு மாணவர்களோடு கைப்பந்து விளையாடினார். மேலும் ஊராட்சியில் வழங்கப்பட்ட கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் முறையாக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் கேட்டிருந்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி