திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா, 63. இவர், அதே பகுதியில் உள்ள அஜிமுகமது, 55, என்பவரது சவுண்ட் சர்வீஸ் கடை முன் படிக்கட்டில் படுத்திருந்தார். அவரை எழுப்புவதற்கு அஜிமுகமது முயற்சித்துள்ளார். ஆனால், முதியவரால் உடனே எழுந்து செல்ல முடியவில்லை. உடனடியாக அவர், பக்கத்து டீக்கடையில் இருந்து கொதிக்கும் தண்ணீரை வாங்கி வந்து, பாட்ஷா மீது ஊற்றினார். இதில், அவரது கழுத்து, கை உள்ளிட்ட இடங்கள் வெந்து காயமடைந்ததால், வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். திருவண்ணாமலை டவுன் போலீசார், அஜிமுகமதுவிடம் விசாரிக்கின்றனர்.