திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டபேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திமுக மருத்துவரணி துணை தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் ஆகியோர் தலைமையில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதியேற்பு எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆரஞ்சு ஆறுமுகம் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.