தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி தலைமையில், மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் முன்னிலையில், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. திருவேங்கடம் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மாவட்ட கழக நிர்வாகிகளுடன் அமைதி ஊர்வலம் சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். பிறகு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். உடன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெசுதி. சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.