திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எவ. வேலு தலைமையில் கால்நடை வளர்போரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழகத் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.