திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் தென்பெண்ணை இலக்கிய சமவெளியினர் நடத்தும் தமிழின் முதல் காப்பியமாம் சிலப்பதிகார காப்பியத்தின் நாடகம் அரங்கேற்ற நிகழ்ச்சியினை,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைக்க வருகைபுரிய உள்ள நிகழ்ச்சியின் மேடை, பந்தல் அமைய உள்ள இடத்தினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் இரமேஷ், கோவிந்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், நகர செயலாளர் சுப்பிரமணியன், தென்பெண்ணை இலக்கிய சமவெளியை சார்ந்த தொழர்கள் ஆசிரியர் பாண்டு, வெற்றிமுரசு, கழக நிர்வாகிகள் கோவிந்தராஜன், காத்திகேயன், பஞ்சமணி பெருமாள், சுதாகர், மதன், சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.