திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (செப்.,15) செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், செங்கம் நகர கழக செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாட்ஷா, கூட்டுறவு சங்க தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமஜெயம் மற்றும் செங்கம் நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.