திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 1 - கோடியே 27 லட்சம் மதிப்பீடில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி இன்று (செப்.,5) பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.