கிரிவல பாதையில் ஆட்சியர் திடீர் ஆய்வு.

68பார்த்தது
கிரிவல பாதையில் ஆட்சியர் திடீர் ஆய்வு.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள், மகா தீபம் ஏற்றும் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள குளங்களை பாதுகாப்பது மற்றும் மகா தீபம் ஏற்றும் 2, 668 அடி உயர மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் அண்மையில் பொதுநல வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வழக்குரைஞா் எம். சி. சாமியை நியமித்தது.

இதையடுத்து, சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன், வழக்குரைஞா் எம். சி. சாமி ஆகியோா் குளங்கள், ஆக்கிரமிப்புப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மகா தீப மலையடிவாரத்தில் அக்னிலிங்கம் பகுதியில் உள்ள பாண்டேஸ்வரா் கோயில் குளம், பாண்டவ தீா்த்தக் குளம், பச்சையம்மன் கோயில் அருகே புதுத்தெரு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பகுதிகளை இருவரும் பாா்வையிட்டு முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி