திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி, தேவி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி அடுத்த சேவூர் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த இயேசுராஜன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் சேவூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். மேலும், எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது.