தமிழ்நாட்டில் உடல் பருமன் பிரச்சினை கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் டெல்லி, பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களிலும் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் கொண்ட பெண்கள் அதிகமாக உள்ளனர். உடல் எடை கூடிய பெண்களின் விகிதம் 15.5 சதவீதத்தில் இருந்து 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. உடல் எடையை குறைப்பதில் பெண்கள் அக்கறை காட்ட வேண்டும்.