ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் இன்று(அக்.01) ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கண் தானம், புற்றுநோய், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.