கேரளாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ளே ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ரயில் மோதி 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 4 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.