தெலங்கானா: நாகர்கர்னூல் மாவட்டத்தில் முட்டை தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தி வட்டேமான் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதைய்யா (60) என்ற முதியவர் பசியுடன் இருந்தபோது முட்டை திண்றுள்ளார். அப்போது, முட்டை தொண்டையில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.