ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

70பார்த்தது
ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ஆரணியை அடுத்த மெய்யூா் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

மெய்யூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, மகாபாரத சொற்பொழிவாளா் பி. எஸ். சண்முகம் சொற்பொழிவாற்றி வருகிறாா். மேலும், ஏப்ரல் 14 முதல் தினமும் இரவு 10 மணிக்கு மேல் ரேணுகாம்பாள் நாடக மன்றத்தின் மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தது.

இதனை முன்னிட்டு கோயில் மூலவா் சந்நிதியினுள் அலகு நிறுத்தப்பட்டு கா்ணன் பிறப்பு, தா்மா் பிறப்பு, பாஞ்சாலிஅம்மன் பிறப்பு, நாக கன்னி திருமணம், சுபத்திரை திருமணம், தபசு மரம் ஏறுதல் என தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து, துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மெய்யூா் கிராம மக்கள் மற்றும் கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி